அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் 101-வது வெற்றியை பதிவு செய்து புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் அரையிறுதி போட்டியில் உக்ரெய்ன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா - செரீனா வில்லியம்ஸ் பலப்பரிட்சை நடத்தினர்.
பரபரப்பாக சென்ற இப்போட்டியில் 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனா வில்லியம்ஸ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா. மேலும் தனது 7-வது US ஓபன் கோப்பைப்பான போட்டியை எட்டியுள்ளார்.
Flawless tennis...
rena Williams defeats Svitolina and will await the winner of Andreescu/Bencic in the US Open final! pic.twitter.com/QH0BCio5kj
— US Open Tennis (@usopen) September 6, 2019
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 2-வது சுற்றில் 19 வெற்றிகளும் 3-வது சுற்றில் 18 வெற்றிகளும் நான்காவது சுற்றில் 16 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். காலிறுதி சுற்றில் 13 மற்றும் அரையிறுதி சுற்றில் 10 வெற்றிகளையும் செரீனா வில்லியம்ஸ் பதிவு செய்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பயின் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.
நியூயார்க்கில் அவர் பெற்ற 101-வது வெற்றி கிறிஸ் எவர்ட்டின் யுஎஸ் ஓபன் சாதனையை சமன் செய்துள்ளது, ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதல் மற்றும் மிக சமீபத்திய தோற்றங்களுக்கு இடையேயான மிகப்பெரிய இடைவெளியில் தனது சகோதரி வீனஸ் வைத்திருந்த சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.