ரஜினி ஸ்டைலில் நன்றி தெரிவித்த ஹாட்ரிக் நாயகன்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வரும் இம்ரான் தாகிர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Last Updated : Mar 5, 2018, 05:13 PM IST
ரஜினி ஸ்டைலில் நன்றி தெரிவித்த ஹாட்ரிக் நாயகன் title=

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக இம்ரான் தாகிர் விளையாடி வருகிறார். 

மார்ச் 3-ம் தேதி குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இம்ரான் தாகிர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை செய்தார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாகிரின் சாதனையை பாராட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பராசக்தி எக்ஸ்பிரஸ் என வாழ்த்தி உள்ளது.

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் வசனம் மூலம் நன்றி தெரிவித்தார் இம்ரான் தாகிர். மேலும் சென்னை அணியில் இடம்பெற்றது முதல் தமிழ் கற்ற தொடங்கிவிட்டதாகவும் இம்ரான் தாகிர் தெரிவித்திருந்தார்.

 

 

Trending News