தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான சீனியர் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், அயர்லாந்துக்கு எதிராக விளையாடுவதற்கு இளம் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப, அந்த தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சுசாம்சன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில், சஞ்சு சாம்சன் சிறிது இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சிகளை தொடங்கியுள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இவர் பயிற்சியை தொடங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, அயர்லாந்துக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலான இந்திய அணி செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இப்போதைக்கு இடம் கன்பார்ம் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொடரில் அவர் ஒழுங்காக விளையாடாததால் மீண்டும் இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023; மீண்டும் வருகிறதா சாம்பியன்ஸ் லீக்? ஜெய்ஷா சூசகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR