சச்சினுக்கு எதிராக டிராவிட் செய்த சதி - யுவராஜ் சிங் ஓபன் டாக்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் 200 ரன்கள் அடிப்பதற்குள் டிராவிட் டிக்ளோர் செய்தது குறித்து யுவராஜ் சிங் ஓபனாக பேசியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2022, 04:24 PM IST
  • டிராவிட் மீது யுவராஜ் சிங் அதிருப்தி
  • சச்சின் 200 ரன்கள் அடித்திருக்கலாம்
  • டிராவிட் முன்கூட்டியே டிக்ளோர் செய்தார்
சச்சினுக்கு எதிராக டிராவிட் செய்த சதி - யுவராஜ் சிங் ஓபன் டாக் title=

பாகிஸ்தானுக்கு எதிரான முல்தான் டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த பிறகு இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்

200 ரன்களை தவறவிட்ட சச்சின்

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. அப்போட்டியில் இந்திய அணி வீரர் வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சச்சின் தெண்டுல்கரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். 194 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணியின் கேப்டன் டிராவிட் திடீரென டிக்ளோர் செய்வதாக அறிவித்தார். 6 ரன்கள் எடுத்தால் சச்சின் இரட்டை சதம் பதிவு செய்திருப்பார். அதற்குள் டிராவிட் டிக்ளோர் செய்தார். 

மேலும் படிக்க | குஜராத் அணிக்கு விளையாடப்போகிறாரா பொல்லார்டு?

யுவராஜ் சிங் கேள்வி

சச்சின் டெண்டுல்கரும் தனது சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே'வில் இதைப் பற்றி எழுதியுள்ளார். இப்போது இது பற்றி யுவராஜ் சிங்கும் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, " களத்தில் இருந்த எங்களுக்கு நாங்கள் வேகமாக விளையாட வேண்டும் என்று நடுவில் ஒரு செய்தி கிடைத்தது. இல்லையென்றால் நாங்கள் டிக்ளோர் அறிவிக்கப் போகிறோம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த செய்தி வந்தபிறகு திடீரென டிக்ளோர் அறிவிக்கப்பட்டது. இன்னும் 2 ஓவர்கள் விளையாடி இருந்தால் சச்சின் இரட்டை சதம் அடித்திருப்பார். டிக்ளோருக்குப் பிறகு நாங்கள் 8 முதல் 10 ஓவர்கள் வீசினோம். இன்னும் இரண்டு ஓவர்கள் விளையாடுவது ஒரு டெஸ்ட் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்காது என்று நினைக்கிறேன்.

யுவராஜ் சிங் சாடல்

மூன்றாவது அல்லது நான்காவது நாளாக இருந்தால் கூட டிக்ளோர் செய்திருக்கலாம். ஆனால் அப்படி இல்லை.  மேலும், 150 ரன்களில் இருக்கும்போது கூட, டிக்ளோர் அறிவித்திருக்கலாம். இரட்டை  சதத்துக்கு மிக நெருக்கமாக இருந்தபோது அப்படி செய்தது ஆச்சர்யமாக இருந்தது. சச்சின் 200 ரன்களுக்குப் பிறகு இன்னிங்ஸை டிக்ளேர் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார். அந்த போட்டியில் 59 ரன்கள் எடுத்திருந்தார் யுவராஜ். அடுத்த போட்டியில் சதமடித்தார். 

மேலும் படிக்க | IPL: வயாகரா மாத்திரையை சாப்பிட்டாரா சூர்யகுமார் யாதவ் 

யுவராஜ் சிங்கின் விருப்பம்

ஒருநாள் போட்டியைப் போல் யுவராஜ் சிங்கிற்கு டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இது குறித்து அவர் பேசும்போது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என விரும்பினேன். வேகப்பந்துவீச்சாளர்களை இரண்டு மூன்று நாட்கள் எதிர்கொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது என யுவராஜ் தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News