TNPL 2021: 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி

திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 06:48 AM IST
TNPL 2021: 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி title=

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் (TNPL 2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors) மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ALSO READ | TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்

முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த போட்டியில் அதிகபட்சமாக தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்து இருந்தனர். திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவண் குமார் 2 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. முதலில் அமித் சாத்விக், முகுந்த் கூட்டணி சேர்ந்தனர். இதில் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார். நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி இலக்கை நோக்கி சென்றனர். 

இறுதியாக திருச்சி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News