T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷர்மா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 சிக்ஸர் அடித்தன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா!

Last Updated : Aug 4, 2019, 11:00 PM IST
T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷர்மா! title=

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 சிக்ஸர் அடித்தன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா!

மேற்கிந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 51 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதில் 6 போர், 3 சிக்ஸர் அடக்கம். 

இப்போட்டியில் ரோகித் அடித்த 3 சிக்ஸர்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். 88 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 107 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் 54 இன்னிங்ஸில் 105 சிக்ஸர் அடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 74 இன்னிங்ஸில் 103 சிக்ஸர்களுடன் உள்ளார்.

Trending News