நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.
இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 2,288 ரன்கள் குவித்து இப்பட்டியிலில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் MJ குப்தில் 2272 ரன்கள் குவித்தும், பாக்கிஸ்தான் அணி வீரர் சொயிப் மாலிக் 2263 ரன்களுடன் உள்ளனர்.
Rohit Sharma brought up a blistering fifty off 28 balls, but was out soon after.
He's now the highest run-getter in men's T20Is, going past Martin Guptill's mark of 2272! #NZvIND FOLLOW LIV ttps://t.co/yUSxLXx85m pic.twitter.com/3zkzdyjEbR
— ICC (@ICC) February 8, 2019
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி இப்பட்டியலில் 2167 ரன்களுடன் 4-ஆம் இடத்தில் உள்ளார். 1605 ரன்கள் குவித்துள்ள ரெய்னா 19-வது இடத்திலும், 1526 ரன்கள் குவித்துள்ள MS டோனி 21-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் ஒருபகுதியாக இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டி இன்று எட்டன் பார்க் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.