மக்களவை தேர்தல் மீதான எதிர்பார்ப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நாட்டு மக்களின் கவனம் உலக கோப்பை கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30-ஆம் நாள் இங்கிலாந்தில் துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்க பத்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பத்து அணிகளும் இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சி ஆட்டதினையும் துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் நாளை நியூசிலாந்து அணியுடன் இந்தியா அணி தனது முதல் பயிற்சி ஆட்டதினை விளையாடவுள்ளது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரோகித் ஷர்மா "கோலிக்கு உதவி தேவைப்படும் போது நான் எப்போது துணை நிற்பேன்" என தெரிவித்துள்ளார்.
கிரோக்கெட் போட்டிகளில் கோலியின் தலைமை குறித்து பேசிய அவர்., "கோலி வலுவான அணியை கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தன்னிடம் இருக்கும் சிறப்பான அணியை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்"
"போட்டியின் போது அணியின் வெற்றிக்கு ஏற்படும் வெற்றிடத்தை நிறப்பும் வகையில் அவ்வப்போது நான் செயப்படுவதில் மகிழ்ச்சி. எனது உதவி தேவைப்படும் பட்சத்தில் கோலிக்கு துணையாய் நான் என்றும் இருப்பேன்."
"அணியில் யார் முதலிடம், அணியின் முதலிடன் போன்ற விஷயங்களை கொண்டு நம் மனதை குழப்பிக்கொள்ள கூடாது. அணிக்கு தேவையான விஷயங்களை மட்டும் எண்ணி செயல்படுத்த வேண்டும்." என தெரிவித்தார்.
அணித்தலைவர் விராட் கோலி இல்லாமல் கடந்த ஆண்டு அரபு நாட்டில் நடைப்பெற்ற ஆசிய கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான அணி பங்கேற்று வெற்றி பெற்றது. கோலி இல்லாமல் கோப்பையை கைப்பற்றிய ரோகித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவே காட்சியளிக்கின்றார்.