வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீச, அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள வங்கதேச அணியினர் தடுமாறி வருகின்றனர். அவரைப் போலவே 2020 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியில் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடகூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடராஜனுக்கு வாய்ப்பு
இந்திய அணி இப்போது வங்கதேச சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. இந்த தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக வீரர் நடராஜன் பெயர், பரிசீலனைக்குகூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. கடைசியாக விராட் கோலியின் தலைமையில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், ரோகித் சர்மா இந்திய அணிக்கு முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
மேலும் படிக்க | அர்ஜூனை காதலிக்க அனுமதியுங்கள்... ஊடகங்களுக்கு சச்சின் மெசேஜ்!
நடராஜன் காயம்
இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை பிடிக்கமுடியவில்லை. யார்க்கர் மேன் என அழைக்கப்பட்டு, அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பும்ராவுக்கு மாற்றான வீரராக பார்க்கப்பட்ட நிலையில், காயத்தால் அவதிப்பட்டு சில காலம் ரெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், காயத்தில் இருந்து மீண்ட பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
நடராஜனின் ரெக்கார்டு
ஐபிஎல் போட்டிகளில் தற்போது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் அவர், இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி இருக்கிறார். இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டி, நான்கு 20 ஓவர் போட்டி மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்டில் 3 விக்கெட்டுகளையும், 20 ஓவர் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் அவர், ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். நடராஜன் மீண்டும் இந்திய அணிக்காக எப்போது களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க | 'அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய டிராவிட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ