நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த வீரர் ரோகித் ஷர்மா தான் என இந்திய கிரிக்கெட அணி தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்!
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி தெரிவிக்கையில்., ரோகித்தின் ரன் குவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது. நான் ரன் குவிப்பதை விட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்ற அணிகளை விடவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் ரசிகர்கன் இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து ரோஹித், கோலி, கே.எல். ராகுல் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் கணிசமான ரன்களை குவிக்கின்றனர். அவ்வப்போது தோனியும் தன் பங்குக்கு ஆடி அணி அதிக ஸ்கோரை எட்ட உதவுகிறார். பேட்ஸ்சூமன்களில் குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8 இன்னிங்ஸில் மட்டும் விளையாடிய அவர் 647 ரன்களை குவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, "இந்த உலகக்கோப்பை தொடரில் மாறுபட்ட ரோல் வகித்துள்ளேன். ஒரு கேப்டன் என்ற அடிப்படையில் அணி என்ன எதிர்பார்க்கிறதோ அவை அனைத்தையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். ரோஹித் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தின் நடுப்பகுதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் தோனி, ரிஷப், கேதார் ஆகியோர் பேட்டிங்கின் கவனம் செலுத்தி வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் நல்ல ரன் சேர்த்து வைத்தால், இறுதியில் நான் ரன் குவிப்பில் ஈடுபடுவேன். அணியின் வெற்றிதான் முக்கியம்.
உலகக்கோப்பை தொடரில் அணிக்கான எனது பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 500 ரன்களை ஒரு பேட்ஸ்மேன் குவிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. உலகக்கோப்பை மிகவும் நெருக்கடி வாய்ந்த தொடர். இதில் ரோகித் ஷர்மா சாதாரணமாக ரன் குவிக்கிறார். புகழுக்கு தகுதிவாய்ந்த நபர் அவர். என்னைப் பொருத்தளவில் இன்றைய சூழலில் அவர்தான் நம்பர் ஒன் ஒன்டே பேட்ஸ்மேன் என குறிப்பிட்டுள்ளார்.