’ஆர்சிபி..ஆர்சிபி..ஆர்சிபி’ ரசிகர்களின் கோஷத்தால் வென்ற பெங்களுரு

கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் எழுந்த ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பான மேட்சில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று, 2வது எலிமினேட்டருக்கு முன்னேறியது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2022, 02:56 PM IST
  • ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி
  • பரபரப்பான போட்டியில் லக்னோ தோல்வி
  • ராஜஸ்தானை எதிர்கொள்ளும் பெங்களூரு
’ஆர்சிபி..ஆர்சிபி..ஆர்சிபி’ ரசிகர்களின் கோஷத்தால் வென்ற பெங்களுரு title=

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் 2022-ன் முதல் எலிமினேட்டர் மேட்ச் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, பெங்களூரு பேட்டிங் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியுடன் களமிறங்கிய கேப்டன் டூபிளசிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்அவுட்டாக வெளியேறினார். நிதானமான ஆடிய விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல் 9 ரன்களில் வெளியேறினார்.

மேலும் படிக்க | RCB vs LSG: ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ரஜத் படிதார் - யார் இவர்?

யாரும் எதிர்பார்க்காத வகையில் 3வது பேட்டிங்கில் களமிறங்கிய ராஜாட் படிதார், லக்னோ அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். கிடைத்த பந்துகளையெல்லாம் எல்லைக்கோட்டை நோக்கி விளாசிய அவர், 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு பக்கப் பலமாக களமாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

லக்னோ அணியின் பவுலிங் படுமோசமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் மற்றும் படிதார் உள்ளிட்டோரின் அருமையான கேட்சுகளை அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து கோட்டைவிட்டனர். இதனால், பெங்களூரு அணியின் அதிரடியை அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

டிகாக் 6 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த மன்னன் வோரா 19 ரன்களும், தீபக் ஹூடா 45 ரன்களும் விளாசினர். மறுமுனையில் கேப்டன் கே.எல்.ராகுல் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடி அரைசதமடித்தார். 19வது ஓவரில் அடித்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டபோது 79 ரன்களுக்கு கேட்சாகி வெளியேறினார். ஹாசில்வுட் வீசிய அடுத்த பந்திலேயே குருணால் பாண்டியாவும் அவுட்டானார். இதனால் மேட்சில் பரபரப்பு ஏற்பட்டது.  இருப்பினும் சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியுற்ற லக்னோ அணி வெளியேறியது. வெள்ளிகிழமை நடைபெறும் 2வது எலிமினேட்டரில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>

Trending News