வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் நெருங்கினார். இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், இந்திய அணி 2 - 0 என வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தது. வெற்றியை நிர்ணயிக்கும் 2வது டெஸ்ட் போட்டியில், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை காப்பாற்றியவர் ரவிச்சந்திரன் அஷ்வின். அந்த போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான 42 ரன்களும், பந்துவீச்சில் 6 விக்கெட்களும் எடுத்திருந்தார். கீழ் வரிசையில் விளையாடி இந்திய அணியை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியதற்காக அஸ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
மேலும் படிக்க | விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு இது 9வது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதேபோல் 9 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் டிராவிட், சேவாக், கும்ப்ளே ஆகியோரை ராகுல் பின்னுக்குத் தள்ளியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 19 விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதேபோல், தொடர்ந்து அதிக ஆட்டநாயகன் விருதுகள் பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். தொடர் நாயகன் விருதை வென்ற அனில் கும்ப்ளே 4 முறையும், ராகுல் டிராவிட் 4 முறையும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அஸ்வின் தற்போது இந்திய அணியின் மீட்பராக மாறி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பையை வென்றதில் இருந்தே அவரது இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டிலும் அஸ்வின் இன்னிங்ஸ் இந்தியாவின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. இந்திய டெஸ்ட் அணிக்கு சிறந்த ஒரு ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார் அஸ்வின்.
மேலும் படிக்க | 2k கிட் என நிரூபித்த பிரித்வி ஷா! அணியில் வாய்ப்பு கிடைக்காததால் செய்த காரியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ