Ravichandran Ashwin ; எல்.பி.டபள்யூ முறையில் கிரிக்கெட்டில் அவுட் கொடுப்பது பேட்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஸ்வின் தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் இது குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். "ஒரு பேட்ஸ்மேன் ரிவர் ஸ்வீப் ஆடுகிறார், ஸ்விட்ச் ஷாட் ஆடுகிறார். அந்த நேரத்தில் லெக்சைடுக்கு வெளியே பந்து பிட்சாகி, பேட்ஸ்மேன் பேடில் பட்டு, அவுட்கேட்டு முறையிட்டால், அவுட்சைடு ஸ்டம்ப் என கூறி விக்கெட்டை நிராகரிக்கிறார்கள். இது பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு கொடுக்கப்படும் சமமான வாய்ப்பாக இல்லை.
மேலும் படிக்க | IND vs ENG: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக விளையாடும் மூவேந்தர்ஸ்! யார் அவர்கள்?
கிரிக்கெட் பொறுத்தவரை பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் என இருவருக்கும் சமமான விதிமுறைகளாக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் எந்த ஷாட் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. ஆனால் பந்துவீச்சாளர் இந்த திசையில் இப்படி தான் பந்துவீச வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கிறது. இது சரியான விதிமுறையே கிடையாது. பந்துவீச்சாளர்களுக்கு இது நியாயமாகவும் இருக்காது. அவுட்சைடு ஸ்டம்பில் பந்து பிட்சாகி, பேட்ஸ்மேன் மிஸ் செய்து பந்து ஒருவேளை பேடில் பட்டு, அந்த பந்து ஸ்டம்பை தாக்குகிறது என்றால் நிச்சயம் அவுட் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியை உதாரணமாக கூறியுள்ளார். அதில் பத்து ஷாட்டுகளுக்கும் மேலாக ஜோ ரூட் ஸ்விட்ச் ஷாட் ஆட முயற்சிக்கிறார். அதில் ஒரே ஒரு முறை மட்டுமே பந்து அவருடைய பேட்டில் பட்டது. மற்றமுறை மிஸ்செய்தார். அப்படி அவர் மிஸ் செய்யும்போது பேடில் பட்ட பந்துக்கு எல்பிடபள்யூ அப்பீல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும். இது குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அஸ்வின் வலியுறுத்தியுள்ள இந்த விதிமுறை மாற்றத்துக்கு ஐசிசி கவனத்தில் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ’பூதாகரமாகும் கிரிக்கெட் சூதாட்டம்’ உத்தரகாண்ட்டில் சலசலப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ