இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமெனில் "யோ யோ" சோதனையில் வெற்றிப்பெருவது அவசியம். தற்போது இத்தேர்வில் வெற்றிப்பெற்று இந்திய அணியில் இடம்பெற காத்திருகின்றார் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுன்டர் சுரேஷ் ரெய்னா!
இந்த யோ யோ சோதனையானது இவரது மூன்றாவது சோதனையாகும். முன்னதாக முதல் இரண்டு முறை இந்த தேர்வில் ரெய்னா தோல்வியுடன் திரும்பினார். இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அந்த பதிவில் தனது பயிற்சி புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.
"யோ யோ டெஸ்ட்" - அப்படி என்றால்?
இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டுமெனில் "யோ யோ" டெஸ்ட் என்ற தேர்வு முறை கையாளப்படுகிறது. இந்த தேர்வில், 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிது வேக அதிகரிப்புடன் ஓடவேண்டும். ஓட்டத்தின் போது பீப் ஒலி எழுப்பபடும், ஒவ்வொரு பீப் ஒலியின் போதும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று வீரர்கள் தங்கள் பிட்னஸை நிரூபித்து காட்ட வேண்டும்.