7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா மகளிர் அணி!

சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் A போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

Last Updated : Feb 29, 2020, 01:51 PM IST
7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா மகளிர் அணி! title=

சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் A போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக சமாரி அட்டப்பட்ட 33(24) ரன்கள் குவித்தார். இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட் குவித்தார்.

இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் 14.4-வது ஓவரில் 116 ரன்கள் குவித்து 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 47(34) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மற்ற வீராங்கணைகள் இரட்டை இலக்க ரன்களுடன் அணியின் வெற்றிக்கு போராடினர். இதனையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆட்ட நாயகி விருது இந்திய அணியின் ராதா யாதவிற்கு அளிக்கப்பட்டது. 

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா தற்போது குரூப் A புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடனும், நீயூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Trending News