சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் பதவியை இழந்த விளாடிமிர் புடின்

உலக விளையாட்டுகளில் தனது மிகவும் பெருமையான அதிகாரப்பூர்வ பதவியை இழந்தார் விளாடிமிர் புடின் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 27, 2022, 07:25 PM IST
சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் பதவியை இழந்த விளாடிமிர் புடின் title=

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு  கவுரவத் தலைவர் பதவி விளாடிமிர் புடினிடம் இருந்து பறிபோய்விட்டது.

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, ரஷ்ய அதிபரை கவுரவ தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இது கவுரவப் பதவியாக இருந்தாலும், பெருமைக்குரிய பதவியாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்ட பிறகு, ரஷ்ய அதிபருக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட புடினுக்கு, பல்வேறு பிரபல வீரர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ

இந்த நிலையில், சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தூதராக இருந்த விளாடிமிர் புடின், உக்ரைனில் நடந்து வரும் போர் மோதல் காரணமாக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது.

விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) உலக விளையாட்டுகளில் தனது மிகவும் பெருமையான அதிகாரப்பூர்வ பதவியை தற்காலிகமாக இழந்தார். 

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு புடினின் கௌரவ ஜனாதிபதி அந்தஸ்தை இடைநிறுத்துவதற்கு காரணமாக "உக்ரைனில் நடந்து வரும் போர் மோதல்" என்பதை சுட்டிகாட்டியுள்ளது. 

sports

ஜூடோ விளையாட்டில் ஆர்வமுள்ள ரஷ்ய அதிபர் புடின், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன் அன்று அதிபர் புடின் உத்தரவைத் தொடர்ந்து, ரஷ்யா தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க | ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர் 

இந்த ஆக்ரமிப்பு நடவடிக்கையை  விவரிக்க "போர்" (War Conflict) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ள ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு IJF மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் மீதான போர் தொடுத்த ரஷ்யாவின் செயலை விவரிக்க "மோதல் அதிகரிப்பு"  (escalation of conflict) போன்ற சொற்றொடர்களையே பல அமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றனர்.  

கிரெம்ளின் ஆதரவு தன்னலக்குழு மற்றும் புட்டினின் நீண்டகால நண்பரான ஆர்கடி ரோட்டன்பெர்க் IJF நிர்வாகக் குழுவில் "வளர்ச்சி மேலாளராக" இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு

மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு சாட்சியாய் இந்திய மாணவியின் பதுங்குக்குழி அனுபவம்

மேலும் படிக்க | பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News