Babar Azam: கசிந்தது கேப்டனின் ஆபாச வீடியோ...? கலக்கத்தில் பாகிஸ்தான்!

Babar Azam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் குறித்தது என கூறப்படும் சில ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2023, 07:41 AM IST
  • வெளியாகியுள்ள வீடியோக்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
  • பாபருக்கு ஆதரவும், விமர்சனமும் சேர்ந்தே எழுந்துள்ளது.
Babar Azam: கசிந்தது கேப்டனின் ஆபாச வீடியோ...? கலக்கத்தில் பாகிஸ்தான்! title=

Babar Azam: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்போதும் சர்ச்சைகளுக்கும் அதிரடிகளுக்கும் பெயர்போனதுதான். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையிலும் கூட சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை அந்த அணி முன்னேறியிருந்தது. எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

பாபர் ஆசம் உடையது என கூறப்படும் சில தனிப்பட்ட மற்றும் ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து எதிர்வினைகள் வேகமாக வந்ததால், அந்த வீடியோக்கள் பேசுபொருளாக மாற அதிக நேரம் எடுக்கவில்லை. 

மேலும் படிக்க | IND vs SL: பொங்கல் வின்னர் விராட் கோலி... தூள் தூளாகி போன சச்சின் சாதனை!

இதன்மூலம், பாபர் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியான உரையாடலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இணையத்தில், பலர் பாபரை விமர்சித்தும், அவரது செயல்களுக்காக அவரைத் தாக்கியும் வருகின்றனர். இருப்பினும், பலர் அவருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்த வீடியோ, ஆடியோ அவருடையது அல்ல என்றும் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக வாதிட்டனர். அந்த வீடியோக்கள் அவருடையதா இல்லையா என்பதை பாபரிடம் இருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சில ரசிகர்கள் 'Stay Strong Babar Azam' என்று கூட ட்ரெண்ட் செய்தனர்.

பாபர் தலைமையிலான பாகிஸ்தான், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-0 என சமன் செய்தது. நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரையும் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி இழந்திருந்தது. 

பாபரின் தலைமையின் கீழ், நடந்துகொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) நெடுந்தொடரில், பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானை வழிநடத்திய போதிலும், பாபர் ஆசாமின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து ஊகங்கள் நிலவி வருகின்றன. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேசிய அணி வேறெந்த போட்டியிலும் விளையாடாது. அதன்பின்னர், ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். நியூசிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. 

மேலும் படிக்க | Google Doodle:: கூகுள் டூடூல் வெளியிட்டு வாழ்த்தும் கே.டி.ஜாதவ் யார்? அப்படி என்ன செய்துவிட்டார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News