Pakistan Cricket: தடைக்குப் பிறகு திரும்பும் பாகிஸ்தானின் புயல்வேக பந்துவீச்சாளர்

ஐசிசி தடையை நீக்கியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சோயிப் அக்தர் போன்ற புயல்வேக பந்துவீச்சாளர் அணிக்கு திரும்பியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 9, 2022, 05:18 PM IST
  • பாகிஸ்தான் அணிக்கு புதிய பந்துவீச்சாளர்
  • தடையை நீக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
  • முகமது ஹஸைனைன் பாகிஸ்தான் அணிக்கு திரும்புகிறார்
Pakistan Cricket: தடைக்குப் பிறகு திரும்பும் பாகிஸ்தானின் புயல்வேக பந்துவீச்சாளர் title=

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய முகமது ஹஸ்னைனின், சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். அவரது பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆய்வுக்குட்படுத்திய ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இதனால் உள்ளூர் மற்றும் சர்வதேசம் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாட முடியாமல்போனது. தற்போது ஐசிசி அவர் மீதான தடையை நீக்கியிருப்பதால் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப இருக்கிறார் முகமது ஹஸ்னைன்.

மேலும் படிக்க | இந்திய வீரரை வம்புக்கு இழுத்த ஆஸ்திரேலிய வீரர்

முகமது ஹஸைனைன்

ஹஸ்னைன் பாகிஸ்தானுக்காக 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் பிஎஸ்எல்லில் மூன்று போட்டிகளில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நடுவே அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுப்பப்பட்டது. உடனடியாக ஐசிசியிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஐசிசி நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து அவரது பந்துவீச்சை ஐசிசி ஆய்வுக்குட்படுத்தியது. அதில் ஐசிசி விதிமுறைகளுக்குட்பட்டு அவருடைய பந்துவீச்சு இல்லாமல் இருந்ததால் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட அவர், பந்துவீச்சை நிரூப்பிக்க போராடினார். ஐசிசியின் ஆய்வுக்கு சென்ற அவர், தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கான தடையையும் ஐசிசி நீக்கியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முகமது ஹஸைனைன் மீதான தடையை ஐசிசி நீக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் அணி

இதன்மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் பாகிஸ்தான் சூப்பர் கிரிக்கெட் லீக்குகளில் முகமது ஹஸைனைன் பங்கேற்கலாம். முகமது ஹஸைனைன், இதுகுறித்து பேசும்போது ஐசிசி தடையை நீக்கியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மீண்டும் பாகிஸ்தான் அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், அந்த கனவு விரைவில் நிறைவேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இந்திய அணியின் கேப்டனுக்கு இர்பான் சொல்லும் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News