அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் பாண்டியா - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

நேற்றைய போட்டியை ஹர்திக் பாண்டியா அற்புதமாக முடித்தார் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 29, 2022, 02:15 PM IST
  • இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின
  • இந்திய அணி அபார வெற்றி பெற்றது
  • ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
அற்புதமாக ஆட்டத்தை முடித்தார் பாண்டியா - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் title=

ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியாவும், பாகிஸ்தான் அணிகளும் மோதின. மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.அதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுலும், ரோஹித் ஷர்மாவும் ஏமாற்றமளித்தனர். சிறப்பாக விளையாடிய கோலி 35 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. ஹர்திக் பாண்ட்யா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன்கள்  எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து ஹர்திக் பாண்ட்யா அணியை வெற்றி பெற வைத்தார். ஜடேஜா 29 பந்தில் 35 ரன்னும் ( 2 பவுண்டரி , 2 சிக்சர் ) அடித்தனர்.

 

இந்திய அணியின் வெற்றி குறித்து  கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “148 ரன் இலக்கை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பணிகளை கொடுத்திருந்தேன். அதனை அவர்கள் சரியாக செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக வேகப்பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். சில சமயங்களில் நாங்கள் சவாலுக்கு உள்ளானோம். ஆனால் அந்த சவால்கள் எங்களை முன்னோக்கி கொண்டு செல்லும். ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியும் அவருக்கு நன்றாக அமைந்தது. அவரது பேட்டிங் திறமை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். அணிக்கு திரும்பியதில் இருந்து அவர் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கிறார்” என்றார்.

Cricket

இதனையடுத்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். வேகப்பந்து வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். கடைசி ஓவரை 15 ரன்வரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்” என்றார்.

மேலும் படிக்க | இந்தியா Vs பாகிஸ்தான் - சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News