விராட் கோலி இல்லை... இந்த வீரர் தான் உலகக் கோப்பையின் ரன் மெஷின் - மூத்த வீரர் கணிப்பு

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த நட்சத்திர வீரர் தான் அதிக ரன்களை குவிப்பார் என தென்னாப்பிரிக்க மூத்த வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2023, 02:28 PM IST
  • உலகக் கோப்பை தொடர் அக். 5ஆம் தேதி தொடங்குகிறது.
  • இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடரை வென்றது.
  • இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி இல்லை... இந்த வீரர் தான் உலகக் கோப்பையின் ரன் மெஷின் - மூத்த வீரர் கணிப்பு title=

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, மும்பை, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, டெல்லி, தரம்சாலா என இந்தியாவின் 10 நகரங்களில் இந்த தொடர் நடைபெற இருக்கிறது. 

இந்திய மண்ணில் உலக அணிகள்

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தொடரை நடத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இதில் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா 1 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும்.  zeenews.india.com/tamil/sports/india-wins-odi-series-against-australia-with-99-run-victory-in-2nd-odi-465222

வரும் அக். 5ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவ. 19ஆம் தேதி அன்று நடக்கிறது. மேலும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் வரும் செப். 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி, செப். 30ஆம் தேதி இங்கிலாந்துடனும், அக். 3ஆம் தேதி நெதர்லாந்துடனும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.

மேலும் படிக்க |விலகிய முக்கிய வீரர்... ஆனால் இது இந்தியாவுக்கு நல்லது தான் - எப்படி தெரியுமா?

இந்தியாவின் சிறந்த ஃபார்ம்

13 ஆண்டுகளாக தீராமால் இருக்கும் ஐசிசி கோப்பை தாகம் இந்த தொடரும் தணிய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி சமீபத்தில் ஆசிய கோப்பையை வென்றது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், உலகக் கோப்பையை வெல்ல தகுதியுடைய அணிதான் என நாங்கள் என்று உலகுக்கு அறிவித்துள்ளது. 

கில் குறித்து டி வில்லியர்ஸ்

மேலும், பலரும் இந்திய அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என தங்களின் கணிப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் மூத்த வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இந்திய அணி குறித்த தனது கணிப்பை தற்போது தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது யூ-ட்யூப் சேனலில் கூறியதாவது, "சுப்மான் கில் தான் உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த பேட்டராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார்" என்றார். 

கில்லின் பேட்டிங் ஃபார்ம்

கில்லின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் குறித்து பார்த்தால், பஞ்சாப்பைச் சேர்ந்த கில் சர்வதேச அளவில் இதுவரை 35 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 சதங்கள், 9 அரைசதங்கள் என மொத்தம் 1917 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் அவர் அடித்துள்ளார். இது தவிர, 18 டெஸ்டில் 966 ரன்களும், 11 டி20 சர்வதேசப் போட்டிகளில் 304 ரன்களும் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த சில வீரர்களில் இவரும் ஒருவர்.

மேலும் படிக்க | ஷர்துலை கைக்கழுவும் இந்திய அணி... இந்த முக்கிய வீரருக்கும் ஓய்வு - அடுத்தடுத்த பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News