IPL 2024, Impact Player: இந்திய அணியின் மூத்த வீரர் வாசிம் ஜாஃபர் அவரது தனித்துவமான சமூக வலைதள பதிவுகள், இணைய மோதல்கள் மூலம் இந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றவர். வாசிம் ஜாஃபர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள வாசிம் ஜாஃபர் கிரிக்கெட் குறித்து தான் கொண்டுள்ள பல தரப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் அறிவிப்பதில் எப்போதுமே தயக்கம் காட்டியதில்லை.
அந்த வகையில், ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கடந்தாண்டு முதல் அமலில் இருக்கும் 'இம்பாக்ட் பிளேயர்' விதியை வரும் சீசனில் இருந்து நீக்க வேண்டும் என அவர் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில்,"ஐபிஎல் தொடரில் இருந்து இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என நான் நினைக்கிறேன், இது ஆல்-ரவுண்டர்களை அதிகம் பந்துவீச ஊக்குவிப்பதில்லை. இதனால் ஆல்ரவுண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்திய கிரிக்கெட்டிலும் பேட்டர்கள் அதிகம் பந்துவீசுவதில்லை என்பதுதான் பெரிய அளவில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்... என்ன நினைக்கிறீர்கள்?" என்று ரசிகர்களின் கமெண்டுக்கும் செவிமடுத்துள்ளார்.
I think IPL needs to take away the impact player rule, as it's not encouraging the all rounders to bowl much and lack of ARs and batters not bowling is a major area of concern for Indian cricket. Thoughts? #IPL2024 #iplauction2024
— Wasim Jaffer (@WasimJaffer14) December 10, 2023
மேலும் படிக்க | வீரர்களின் உயிருக்கே ஆபத்து... பாதிலேயே நிறுத்தப்பட்ட டி20 போட்டி - பின்னணி என்ன?
'இம்பாக்ட் ப்ளேயர்' விதியின்படி, டாஸ் போட்ட பின்னர் ஐந்து மாற்று வீரர்களை அணி அறிவிக்க வேண்டும். இதில் முதல் பிளேயிங் லெவனில் ஆட்டத்தின் எந்த காலகட்டத்திலும், எந்த ஓவரிலும் ஒருவரை பெவிலியனுக்கு அனுப்பி மற்றொரு வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். இது போட்டியின் போது அணிகளுக்கு பேட்டிங் அல்லது பந்துவீச்சில் கூடுதலாக ஒரு நபரை விளையாட வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
17ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு கோடைக்காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். ஐபிஎல் தொடருக்கு பின் டி20 உலகக் கோப்பை வேறு இருப்பதால், இம்முறை ஐபிஎல் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். வரும் சீசனுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடைபெறுகிறது.
ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் தங்களின் பல வீரர்களை தக்கவைத்து, சில வீரர்களை விடுவித்தும் உள்ளது. இதில், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், இங்லிஸ் உள்ளிட்டோர் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் உள்ளிட்டோரும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு வீரர்களாவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ