Women's World Boxing Championships Final Highlights: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் டெல்லியில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மார்ச் 26ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில், இந்தியா சார்பில் பல்வேறு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 48 கிலோ எடைப்பிரிவில் நிது கங்காஸ், 52 கிலோ எடைப்பிரிவில், நிகத் ஜரீன், 75 கிலோ எடைப்பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், 81 கிலோ எடைப்பிரிவில் சாவீட்டி பூரா ஆகிய நான்கு இந்திய வீராங்கனைகள் தங்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். அந்த வகையில், நிது கங்காஸ், சாவீட்டி பூரா போட்டியிடும் இறுதிப்போட்டிகள் இன்றும், மற்ற இருவரின் போட்டியின் கடைசி நாளான நாளையும் நடக்கிறது.
கலக்கிய வீராங்கனைகள்
இன்றைய போட்டியில், நிது கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுட்சைகான் அல்டான்செட்செக் என்பவருடன் மோதினார். மூன்று சுற்றுகள் வரை நீடித்த இந்த போட்டியில், இந்திய வீராஹங்கனை நிது 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, இந்த தொடரில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.
Nitu on the Podium
The moment you all been waiting for@AjaySingh_SG @debojo_m#itshertime #WorldChampionships #WWCHDelhi @Media_SAI @IBA_Boxing @ASBC_official @NituGhanghas333 pic.twitter.com/qJWViIgVmM
— Boxing Federation (@BFI_official) March 25, 2023
மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தங்கத்தை நிது கங்காஸ் கைப்பற்றினார். ஒருசில தருணங்களில், நிது சற்று தடுமாறினாலும், தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் எதிராளியின் மீது ஆதிக்கத்தை செலுத்தி போட்டியை வென்றார் எனலாம்.
இதையடுத்து, நடைபெற்ற 81 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் சாவீட்டி பூரா, சீனாவின் வாங் லினா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 4-3 என்ற புள்ளிக்கணக்கில் சாவீட்டி பூரா வென்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
CHAMPION
Nitu is a World Champion
Book your tickets for the final on:https://t.co/k8OoHXo2BA@AjaySingh_SG @debojo_m#itshertime #WorldChampionships #WWCHDelhi @Media_SAI @IBA_Boxing @NituGhanghas333 pic.twitter.com/C19mVQybrT
— Boxing Federation (@BFI_official) March 25, 2023
இரண்டு தங்கங்கள்
இதன்மூலம், இந்தியா இந்த தொடரில் இரண்டாவது தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளது. மேலும், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை கைப்பற்றும் ஆறாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை நிது கங்காஸ் பெற்றார், சாவீட்டி பூரா ஏழாவது வீராங்கனை ஆனார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ