கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சக்சஸ்! 2வது முறையாக தொடரை கைப்பற்றிய இந்தியா

New Zealand vs India: மழையால் ஆட்டம் பாதிப்பு! நியூசிலாந்தில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்றது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 22, 2022, 07:20 PM IST
  • டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மூன்றாவது டி20 போட்டி "டை"
  • நியூசிலாந்தில் தொடர்ந்து 2வது முறையாக டி20 தொடரை இந்தியா வென்றது.
  • டி20 தொடரின் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு.
கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சக்சஸ்!  2வது முறையாக தொடரை கைப்பற்றிய இந்தியா title=

India tour of New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. இன்று மழை நிற்காததால், மூன்றாவது டி20 போட்டியை முடிக்க நடுவர்கள் முடிவு செய்தனர். இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் டையில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. களம் இறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மூன்றாவது டி20 ஆட்டம் "டை"

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி (DLS) இந்திய அணி 9 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ஆட்டம் டை என நடுவர்கள் அறிவித்தனர். டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சம ஸ்கோரில் சமன் செய்யப்பட்ட மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டி இதுவாகும். இதற்கு முன் 2021ல் இரண்டு போட்டிகள் இப்படி டை ஆனது. 2021ல் கிர்திபூரில் நடந்த நெதர்லாந்து vs மலேசியா போட்டியும், அதே ஆண்டில் மால்டா vs ஜிப்ரால்டர் போட்டியும் டையில் முடிந்தது. ஒட்டுமொத்த டிஎல்எஸ் விதிப்படி சம ஸ்கோரில் டையில் முடிவடைந்த 6வது போட்டி இதுவாகும். மூன்று ஒருநாள் போட்டிகளும் டிஎல்எஸ் விதிப்படி சம ஸ்கோரில் டை ஆகியுள்ளது.

சொந்த மண்ணில் 2வது முறையாக தொடரை வென்ற இந்திய அணி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மழையால் முற்றிலும் கைவிடப்பட்டது. அப்போது டாஸ் கூட முடியவில்லை. அதேநேரம் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 டை ஆனது. இதன்மூலம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது டி20 தொடரை வென்றுள்ளது. முன்னதாக 2020ல், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் நடந்த டி20 தொடரில், அந்த அணியை 5-0 என தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!

அதேபோல ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்ந்து இரண்டாவது டி20 தொடரை வென்று தந்துள்ளார். முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இவரது தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக முகமது சிராஜ் தேர்ந்தெடுக்கபட்டார். அதேபோல இந்த தொடரின் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். 

நியூசிலாந்து vs இந்தியா ஆட்டம் விவரம்:

கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் நியூசிலாந்துக்கு முதல் அடி கொடுத்தார். அவர் ஃபின் ஆலனை எல்பிடபிள்யூ அவுட் செய்தார். பின்னர் மார்க் சாப்மேனை சிராஜ் அவுட் செய்தார். டெவோன் கான்வே மற்றும் க்ளென் பிலிப்ஸ் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர். 16வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. கான்வே மற்றும் பிலிப்ஸ் இருவரும் அரைசதங்கள் அடித்தனர். 200 ரன்களை நோக்கி சென்று கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய பவுலர்கள் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்கிடம் சரண் அடைந்தனர். 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து அணி கடைசி 14 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. அர்ஷ்தீப் மற்றும் சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் பேட்டிங் செய்து 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

மேலும் படிக்க: ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு!

161 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்கமும் மோசமாக இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடக்க ஜோடியான இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பந்த் மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்தனர். இஷான் 11 பந்துகளில் 10 ரன்களும், பந்த் 5 பந்துகளில் 11 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இந்தியா 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது, ​​மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. DLS விதிப்படி இந்திய அணி 9 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் "டை" என நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, ​​ஹர்திக் 18 பந்துகளில் 30 ரன்களும், தீபக் ஹூடா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் படிக்க: IND vs BAN: பங்களாதேஷ் தொடரில் இடம் பெறத் தகுதியில்லாத 3 இந்திய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News