13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எதிர்பார்த்தைப் போலவே 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு முறை டை செய்தும், உலக கோப்பையை உச்சி முகராமல்போன நியூசிலாந்து அணி இப்போட்டியில் இங்கிலாந்து அணியை மனசார பழி தீர்த்துக் கொண்டது. முதலில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து 282 ரன்கள் குவித்தபோதும், சேஸிங்கில் சிறப்பாக விளையாடி ஒரே ஒரு விக்கெட் மட்டும் இழந்து அந்த ஸ்கோரை எட்டி அபார வெற்றியை பதிவு செய்திருக்கிறது நியூசிலாந்து அணி.
மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையில் கலக்கப்போவது யாரு...? - கவனிக்க வேண்டிய 10 முக்கிய வீரர்கள்!
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி
அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை 2023 தொடரின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதன் மூலம் அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களும், கேப்டன் பட்லர் 43 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், பிலிப்ஸ் மற்றும் சானட்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நியூசிலாந்தின் அபார சேஸிங்
(@WasimJaffer14) October 5, 2023
இதனையடுத்து சேஸிங் இறங்கிய நியூசிலாந்து அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் ரன் கணக்கை தொடங்காமலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்தின் கை ஓங்கியதுபோல் அப்போது தெரிந்தது. ஆனால், களத்தில் இருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா நங்கூரம் போல் நிலைத்து நின்றுவிட்டனர். அவர்களை விக்கெட் எடுக்க எவ்வளவு போராடியும் இங்கிலாந்து அணியால் முடியவே இல்லை. கடைசியில், 36.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி 283 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.
கான்வே - ரச்சின் ரவீந்திரா சதம்
அற்புதமாக ஆடிய கான்வே 121 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். அவர் 19 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களும் அடித்தார். அவருக்கு பக்கபலமாக மற்றொரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இருவரின் அதிரடியால் நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து அணி சரணாகதியாக வேண்டியதாகிவிட்டது. ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ