நியூடெல்லி: டயமண்ட் லீக் மீட்டிங்கில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற நீரஜ் சோப்ரா தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 24 வயதான இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபோது ஏற்பட்ட சிறு காயம் காரணமாக பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் விளையாட முடியவில்லை. ஆனால், அதை ஈடு செய்யும் விதமாக தற்போது சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் சாம்பியனும், ஈட்டி எறிதல் விளையாட்டில் திறமைசாலியுமான நீரஜ் சோப்ரா, லொசேன் லீக்கை வெல்வதன் மூலம் டயமண்ட் லீக் மீட்டிங் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கி உள்ளார். தனது முதல் முயற்சியில், தனது சொந்த பாணியில் அவர் எறிந்த ஈட்டி 89.08 மீட்டர் தொலைவை எட்டியது.
Tokyo Olympics gold medallist Neeraj Chopra becomes the first Indian to clinch the Lausanne Diamond League with a best throw of 89.08m.
(File photo) pic.twitter.com/tNX3HA1Zvk
— ANI (@ANI) August 27, 2022
கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபோது ஏற்பட்ட சிறு காயம் காரணமாக ஒரு மாத காலம் ஓய்வெடுத்த நீரஜ் சோப்ரா, பர்கிங்க்ஹாம் காமன்வெல்த் போட்டிகளை தவறவிட்டாலும் தற்போது வரலாற்று மறுபிரவேசம் செய்தார்.
89.08 மீட்டர் ஈட்டி எறிதல் என்பது, நீரஜ் சோப்ராவின் அவரது சிறந்த விளையாட்டுப் பதிவில் மூன்றாவது சிறந்த முயற்சியாகும், அதைத் தொடர்ந்து இரண்டாவது எறிதல் 85.18 மீட்டராக இருந்தாலும் அவரது நான்காவது வீசுதலில் ஒரு தவறு ஏற்படது. ஹரியானாவை சேர்ந்த இளம் வீரர் நீரஜ் சோப்ரா, டயமண்ட் லீக் கிரீடத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, சோப்ரா ஊடகவியலாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்: "இன்றைய எனது வெ/ற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 89 மீ எறிவது ஒரு சிறந்த செயல்திறன். நான் காயத்திலிருந்து மீண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்க்க வேண்டியிருந்ததால் இன்று விளையாடும்போது சற்று பதட்டமாக இருந்தேன்”.
மேலும் படிக்க | உலக தடகளப்போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்
24 வயதான சோப்ரா, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சூரிச்சில் நடைபெறும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், இதன் மூலம், அவர் அவ்வாறு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். வெற்றி பெற்ற போதிலும், அவர் 15 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்தார். நேற்று (ஆகஸ்ட் 26, 2022)எட்டு புள்ளிகள் கூடுதலாக பெற்றார்.
இதற்கிடையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ்ச் 85.88 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 83.72 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
இந்த ஆண்டு ஜூலையில், ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் ஆண் தடகள வீராங்கனை என்ற வரலாற்றுத் தருணத்தை சோப்ரா உருவாக்கினார்.
மேலும் படிக்க | 94 வயது பெண்மணி உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற பெருமைமிகு தருணம்
மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ