ஐபிஎல் 2021ன் 42வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணி மோதியது. அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்தது.
வெற்றிகரமான ஓபனிங் பார்ட்னர்ஷிப் என்று கருதப்படும் ராகுல் மற்றும் மந்திப் 21 மற்றும் 15 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கிறிஸ் கெயில் ஒரு ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய மார்க்கம் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 42 ரன்கள் விளாசினார். தீபக்ஹூடா மற்றும் அர்பிரீத் கடைசி கட்டத்தில் சிறிது ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் போலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
எளிய இலக்கை விரட்டிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து வெளியேறினர். டீகாக் 22 ரன்களில் வெளியேற அதன் பின் ஜோடி சேர்ந்த திவாரி மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. போட்டியின் 17வது ஓவரில் சமீயின் பவுலிங்கில் ஹர்டிக் பண்டியா அடுத்தடுத்து சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் போட்டியின் டென்சன் சற்று குறைந்தது. இரண்டு ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை இருந்தது. 19-வது ஓவரை மீண்டும் சமீ வீச அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து மும்பைக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.
இதன் மூலம் மும்பை அணி 19 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
ALSO READ தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR