IPL 2019 தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லெயன் 41(29), ராபின் உத்தப்பா 40(47) ரன்கள் குவித்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 30(23) ரன்கள் குவித்து வெளியேற., ரோகித் ஷர்மா 55*(48) மற்றும் சூர்ய குமார் யாதவ் 46*(27) இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தின் 16.1-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டினர். இதனையடுத்து மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் மும்பை அணி பெற்ற வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ப்ளா ஆப் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வரும் மே 7-ஆம் நாள் சென்னையில் நடைபெறும் குவாளிப்பையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்க்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.