சோயிப் அக்தரை பங்கமாய் கலாய்த்த முகமது ஷமி

20 ஓவர் உலககோப்பையில் பாகிஸ்தான் அணி தோற்றவுடன் சோயிப் அக்தரை டிவிட்டரில் பங்கமாய் கலாய்த்துள்ளார் முகமது ஷமி.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 13, 2022, 07:55 PM IST
சோயிப் அக்தரை பங்கமாய் கலாய்த்த முகமது ஷமி title=

டி20 உலககோப்பை இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பவுலிங்கை எடுத்தது இங்கிலாந்து அணி. பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். 

ஹரிஸ் புரூக் 20 ரன்களுக்கும், மொயின் அலி 19 ரன்களுக்கும் அவுட்டாக இங்கிலாந்து சிக்கலுக்குள்ளானது. ஆனால், ஒருமுறையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.  

மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ

முகமது சமி கிண்டல்

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் டிவிட்டரில் இதயம் உடைந்தது போல் சிமிலி போட்டார். இந்த பதிவுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலாக கர்மா சகோதரா என தெரிவித்துள்ளார். இந்திய அணியை, இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்துவதற்கு முன்பும் பின்பும் சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது ஷமி.

மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

 

Trending News