இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருவரும் சோபிக்காததால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்ததது. இந்திய அணியிலும் அவர்கள் இருவருக்குமான வாய்ப்பு கேள்விக்குறி என கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பார்த்ததுபோலவே, இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறாரா முகமது ஷமி?
ரஹானே கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார். அவரின் சாராசரி 20.25. அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டிருக்கும் அவர், மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் 290 பந்துகளை எதிர்கொண்ட அவர் 129 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்து கிட்டத்தட்ட 417 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக சதம் விளாசியுள்ளார். இதில் 17 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார்.
அவரைப் போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் புஜாரா. சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா, மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டானார். ஆனால், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய அவர், 83 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து எல்பிடபள்யூ என்ற முறையில் அவுட்டானார். இருவரும் ஃபார்முக்கு திரும்பியிருந்தாலும், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | India Squad: ரோகித்சர்மா புதிய டெஸ்ட் கேப்டன் - ரஹானே, புஜாரா நீக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR