சென்னை அணிக்கு இந்த ஐபிஎல் இதுவரை சிறப்பாக அமையவில்லை. 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோனி கேப்டன்சியில் கடந்த ஐபிஎல் வரை களமிறங்கிய சென்னை அணி இந்த முறை புதிய கேப்டனான ஜடேஜா தலைமையில் களம் கண்டுள்ளது. ஆனால், இதுவரை சிறப்பான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | குல்தீப்புக்கு ஆட்டநாயகன் விருதா? ஐபிஎல்-ஐ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
தொடக்க வீரர் ருதுராஜ் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த நிலையில், கடந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். உத்தப்பா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும்போது, பந்துவீச்சு கேள்விக்குறியாகிறது. பந்துவீச்சு சரியாக அமைந்தால் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், மற்ற சில பிரச்சனைகளும் அந்த அணி சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Welcome Matheesha Pathirana, the Young pace into the SuperFam#Yellove #WhistlePodu pic.twitter.com/C7FURylQeS
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2022
ஏற்கனவே முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். அந்த லிஸ்டில் இப்போது ஆடம் மில்னேவும் இணைந்துள்ளார். 1.90 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் களம் கண்டார். அப்போட்டியில் அவர் காயமடைந்ததால், அதன்பிறகு சென்னை அணிக்காக ஆடம் மில்னே களமிறங்கவில்லை. அவரின் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக இலங்கை இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஸ் பத்ரனவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 20 லட்சத்துக்கு சேர்க்கப்பட்டுள்ள அவர், இலங்கை அணிக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். மலிங்காவைப் போல் பந்துவீசக்கூடிய மதீஸ பத்றன, 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்தார்
மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பொல்லார்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR