IPL தொடர்களில் 150 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையினை MS டோனி பெற்றுள்ளார்!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இந்தாண்டின் 11-வது சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் பொருப்பில் டோனி செயல்பட்டு வருகிறார். அதாவது சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படும் 9-வது சீசன் இது.
இதர அணிகளில் கேப்டன் மாறி மாறி இடம்பெற்று வருகின்றனர். ஆனால் சென்னை அணியை பொருத்தவரை டோனி தான் நிரந்தர கேப்டன். இந்நிலையில் நேற்று PL 2018 தொடரின் 27-வது போட்டி புனே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது.
The return fixture with MI would be #Thala150 as skipper in IPL! #WhistlePodu for the most successful captain in #VIVO IPL. #Yellove #CSKvMI pic.twitter.com/mYSa1Q2agM
— Chennai Super Kings (@ChennaiIPL) April 28, 2018
இப்போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. என்றபோதிலும் இப்போட்டியில் சென்னை வீரர்கள் ரசிகர்களை ஏமாற்றாமல் ஆரவாரப்படுத்தினர் என்பது தான் உன்மை. மேலும் இப்போட்டியான தல டோனி கேப்டனாக பங்கேற்க்கும் 150-வது போட்டியாக அமைந்தது.
36-வயதாகும் டோனி நடப்பு IPL தொடரில் தன் பங்கிற்கு செம்மையாக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!