LIVE IND vs AFG: இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது

இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 225 ரன்கள் தேவை.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 23, 2019, 07:21 AM IST
LIVE IND vs AFG: இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது title=

18:36 22-06-2019
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய கேப்டன் விராட் மற்றும் கேதார் ஜாதவ் தவிர மற்ற வீரர்கள் 30 ரன்களை கூட தாண்டததால், இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் காண உள்ளது.

 


18:27 22-06-2019
48.4 ஓவரில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 7(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


18:04 22-06-2019
44.3 ஓவரில் முன்னால் கேப்டன் தோனி 28(52) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தியா இதுவரை ஐந்து விக்கெட்டை இழந்துள்ளது.

 


17:06 22-06-2019
30.3 வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


16:48 22-06-2019
26.1 ஓவரில் இந்திய வீரர் விஜய் சங்கர் 29(41) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 


16:31 22-06-2019
231 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி 52வது அறைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் 3வது அரைசதமாகும்.

 


15:59 22-06-2019
14.2 ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 30(53) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக தமிழக வீரர் விஜய் சங்கர் களம் இறங்குகிறார்.

 


15:21 22-06-2019
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 1(10) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி விளையாடி வருகின்றனர்.

 


14:42 22-06-2019
புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக விஜய் சங்கர் ஆட மாட்டார், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் விஜய் சங்கர் களம் காண்கிறார்.

 


14:38 22-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தா அணி இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது.

 

 


சவுத்தாம்டன்: இதுவரை இந்திய அணி ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. இன்றைய போட்டியிலும் தொடர் வெற்றி பெற்று பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும்.

2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. 

இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று நடைபெற உள்ள 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில், அடுத்த சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு ஏற்ப்படும். 

இதுவரை ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ளது. 5 ஆட்டத்திலும் தோல்வியைத் சந்தித்துள்ளது. அதனால் புள்ளி அட்டவணை பட்டியலில் இதுவரை ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி (10வது) இடத்திலேயே உள்ளது.

அதேசமயம் இந்திய அணி இதுவரை ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. இந்தியா விளையாடிய நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது முதல் போட்டியிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியையும், 36 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியையும், 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஒரு ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், மொத்தம் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டம் சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி எந்தவித தடையின்றி நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட் / விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் / முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா

ஆப்கானிஸ்தான்: இக்ரம் அலி கில், ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, குல்படின் நைப், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்தாப் ஆலம் மற்றும் தவ்லத் சத்ரான்.

Trending News