மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற பிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி, சுவாரஸ்யத்தின் உச்சமாக இருந்தது. நொடிக்கு நொடி விறுவிறுவிப்பின் உச்சமாக நகர்ந்து கொண்டிருந்த இறுதிப் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், பிரான்ஸூம் சரிசம பலத்துடன் கோப்பைக்கு மல்லுக்கட்டின. இறுதியில் அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்றது. 80களில் கோப்பையை வென்றிருந்த அர்ஜெண்டினா ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை உச்சிமுகர்ந்திருக்கிறது.
மெஸ்ஸிக்கு இந்த உலக கோப்பையே கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், அவர் இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கினார். தொடரின் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவியிருந்தாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
— Parimal Nathwani (@mpparimal) December 18, 2022
பிரான்ஸூடன் நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்டில் வெற்றி பெற்று உலக கோப்பை கனவை நிறைவேற்றிக் கொண்டது அர்ஜெண்டினா. அத்துடன் மெஸ்ஸின் உலக கோப்பை தாகமும் முடிவுக்கு வந்தது. போட்டிக்கு பிறகு ஆனந்த கண்ணீருடன் திளைத்த மெஸ்ஸி, அளவற்ற மகிழ்ச்சியை குடும்பத்தினருடனும், சக போட்டியாளர்களையும் கட்டியணைத்து பகிர்ந்து கொண்டார்.
— (@iFaridoon) December 18, 2022
போட்டிக்குப் பிறகு தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவீர்களா? என மெஸ்ஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், உலக சாம்பியனாக அர்ஜெண்டினா அணிக்கு இன்னும் சில போட்டிகள் விளையாட விரும்புகிறேன். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரின் இந்த பதிலால் அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அர்ஜெண்டினா அணிக்காக 172 போட்டிகளில் விளையாடி இருக்கும் மெஸ்ஸி இதுவரை 98 கோல்கள் அடித்துள்ளார்.
— Sarafina Napoleon (@FinaNapoleon) December 18, 2022
மேலும் படிக்க | FIFA World Cup 2022 Awards : முக்கிய விருதுகளை வென்றது யார்... யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ