விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அட்வைஸ்!

Last Updated : Jul 11, 2017, 10:02 AM IST
விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அட்வைஸ்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், இதில் 6 பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. இதையடுத்து, விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட உள்ளார். 

இதனிடையே, நேர்காணல் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி:-

"நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. கேப்டன் கோலியுடன் ஆலோசித்த பிறகு பயிற்சியாளர் யார் என்பதை முடிவுசெய்வோம். இந்திய கிரிக்கெட் அணி, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் வகையில் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். 

பயிற்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதுகுறித்து கோலி புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தலையிடாமல் இருந்ததற்காக, கோலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். 

Trending News