இந்தியாவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதால் நியூசிலாந்து அணி பாரிய அடியை சந்திதுள்ளது என தெரிகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று நான்காவது டி20 போட்டி வில்லிங்டண் ஸ்கை மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரான வில்லியம்சன், ஹாமில்டனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது நான்காவது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். வில்லியம்சன் அணியில் இல்லாத நிலையில், வெலிங்டனில் அணியை வழிநடத்தும் பொறுப்பு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பினை நியூசிலாந்து அணியினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து ப்ளாக் கேப்ஸ் குறிப்பிடுகையில்., “கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றிரவு 4வது டி20 போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். 3-வது ஆட்டத்தில் களத்தில் டைவ் செய்யும் போது இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் (ஏசி கூட்டு) ஏற்பட்டது. எனினும் பே ஓவலில் நடைபெற இருக்கும் தொடரின் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறோம். டி20 4-வது போட்டியில் டிம் சவுதி கேப்டன் ஆக இருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
Captain Kane Williamson has been ruled out of tonight’s 4th T20I with a left-shoulder injury (AC joint) sustained while diving in the field in game 3. He will hopefully be available for the final game of the series at Bay Oval. Tim Southee will captain the side in T20I 4. #NZvIND pic.twitter.com/0Igj6RMnzg
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2020
ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நியூசிலாந்து அணி, வில்லியம்சனுக்கு வீட்டு தொடரில் கிடைத்த பெரிய அடியை பரிசாக கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது உடல் ரீதியான காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றையே போட்டியை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியில் வில்லியம்ஸம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதேவேளையில் தொடரை வென்ற இந்திய அணி ஹிட் மேன் ரோகித், மொகமது ஷமி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.