மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் தலைமையில் மும்பை அணி பிளே ஆப்களுக்கு தகுதி பெற தவறியது. மேலும் சமீபத்திய மூன்று சீசன்களில் இரண்டு முறை கடைசி இடத்தைப் பிடித்தது. அதே சமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் மும்பை அணி எந்த எந்த வீரர்களை தக்க வைத்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!
மறுபுறம் அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC 2024 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியில் பொல்லார்ட், டிம் டேவிட், நிக்கோலஸ் பூரன், டிரெண்ட் போல்ட் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் இந்த அணியில் உள்ள சில வீரர்களை ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கலாம். கடந்த 2022 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளுக்கும் நான்கு வீரர்களை தக்கவைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஒவ்வொரு அணியும் 7 முதல் 8 வீரர்களை தக்கவைத்து கொள்ள பிசிசிஐயிடம் அனுமதி கோரியுள்ளார். இது குறித்து இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் இரண்டு வீரர்களை பற்றி பார்ப்போம்.
டிரென்ட் போல்ட்
டிரென்ட் போல்ட் ஆரம்பத்தில் மும்பை அணியில் விளையாடி வந்தார். பின்னர் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி அவரை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்பு குறைவுதான். எனவே நியூசிலாந்தை சேர்ந்த ட்ரென்ட் போல்ட்டை ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் டார்கெட் செய்யலாம். டிரென்ட் போல்ட் மேஜர் லீக் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ரஷித் கானுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மும்பை அணியில் இருந்து போல்ட் வெளியேறியதில் இருந்து நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே மும்பை அணி அவரை அணியில் எடுக்க போட்டி போடும். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு போல்ட் ஓய்வை அறிவித்துள்ளார்.
கீரன் பொல்லார்ட்
ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை அணி டார்கெட் செய்யும் அடுத்த வீரர் கீரன் பொல்லார். எம்ஐ நியூயார்க் அணியில் கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில சீசன்களுக்கு முன்பு வரை ஐபிஎல்லில் விளையாடி வந்த கீரன் பொல்லார் பின்னர் ஓய்வை அறிவித்து பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தற்போது MLC 2024ல் அசத்தலான ஃபார்மில் இருந்து வருகிறார். எனவே ஐபிஎல்லில் அவர் கம்பேக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முக்கிய வீரராகவும் இருந்துள்ளார் கீரன் பொல்லார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ