Yashasvi Jaiswal: யஷஸ்வி ஜெய்ஷ்வால் உடைத்தெறிந்த ரெக்கார்டுகள்..!

Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஷ்வால், பல சாதனைகளை உடைத்தெறிந்தார். கங்குலி, வாசிம் அக்ரம் ஆகியோரின் சாதனைகளை எல்லாம் தகர்த்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2024, 04:49 PM IST
  • யஷஸ்வி ஜெய்ஷ்வால் படைத்த சாதனைகள்
  • சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார்
  • காம்பிளி, விராட் கோலி பட்டியலில் சேர்ந்தார்
Yashasvi Jaiswal: யஷஸ்வி ஜெய்ஷ்வால் உடைத்தெறிந்த ரெக்கார்டுகள்..!  title=

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜெய்ஷ்வால் இரட்டை சதம் விளாசினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 430 ரன்களுக்கு டிக்ளோர் செய்த நிலையில், ஜெய்ஷ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 214 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் விளாசும் இரண்டாவது இரட்டை சதம் ஆகும். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை தகர்த்திருக்கும் அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆகியோரின் சாதனைகளை எல்லாம் தகர்த்திருக்கிறார். 

முதல் சாதனை என்னவென்றால் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய இடது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஷ்வால் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த சாதனை சவுரவ் கங்குலி வசம் இருந்தது. 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 534 ரன்கள் விளாசியிருந்தார். ஆனால் அதனை இப்போது தகர்த்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இதுவரை இந்த டெஸ்ட் தொடரில் 545 ரன்கள் எடுத்திருக்கிறார். 

இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இடதுகை பேட்ஸ்மேன்கள்: 

- 545 யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிராக இங்கிலாந்து 2024,
- 534 சௌரவ் கங்குலி vs பாக் 2007,
- 463 கௌதம் கம்பீர் vs ஆஸ்திரேலியா 2008,
- 445 கௌதம் கம்பீர் vs NZ 2009.

இதற்கு அடுத்தபடியாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஷ்வால். இந்த சாதனை இதுவரை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் வசம் இருந்தது. அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள் விளாசியிருந்தார். இப்போது அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜெய்ஷ்வால்.

மேலும் படிக்க | அஸ்வின் வேண்டுமென்றே இதை செய்தார் என சரமாரியாக குற்றம்சாட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

12 சிக்சர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்து ராஜ்கோட் 2024 
12 சிக்சர்கள் - வாசிம் அக்ரம், ஜிம்பாப்வே, ஷேகுபுரா 1996
11 சிக்சர்கள் - எம் ஹைடன், ஜிம்பாப்வே, பெர்த் 2003
11 சிக்சர்கள் - நாதன் ஆஸ்டிலே, இங்கிலாந்து, கிறிஸ்டர்சர்ச் 2002
11 சிக்சர்கள் - பிரண்டென் மெக்கல்லம், பாகிஸ்தான், ஷார்ஜா 2014
11 சிக்சர்கள் - பிரண்டென் மெக்கல்லம், இலங்கை, எஸ்எல் கிறிஸ்ட்சர்ச் 2014
11 சிக்சர்கள் -  பென் ஸ்டோக்ஸ், தென்னாப்பிரிக்கா, கேப் டவுன் 2016
11 சிக்சர்கள் - குசல் மெண்டிஸ், அயர்லாந்து, காலே 2023

இன்னொரு சாதனைப் பட்டியலிலும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இடம்பிடித்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரையும் பதித்துள்ளார் அவர். இந்தப் பட்டியலில் கவாஸ்கர், லக்ஷ்மண், வாசிம் ஜாபர் ஆகியோர் உள்ளனர். 

இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர்கள்

203* - பட்டோடி vs இங்கிலாந்து, டெல்லி 1964
200* - சர்தேசாய் vs WI, மும்பை BS 1965
220 - எஸ் கவாஸ்கர் vs வெஸ்ட் இண்டீஸ், போர்ட் ஆஃப் ஸ்பெயின் 1971
221 - எஸ் கவாஸ்கர் vs இங்கிலாந்து, ஓவல் 1979
281 - VVS லக்ஷ்மன் vs ஆஸ்திரேலியா, கொல்கத்தா 2001
212 - வாசிம் ஜாஃபர் vs WI, செயின்ட் ஜான்ஸ் 2006
214*- யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs இங்கிலாந்து, ராஜ்கோட் 2024

இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்த போட்டிகளில் 200 ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஷ்வால் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் வினோத் காம்பிளி, விராட் கோலி மட்டுமே இதுவரை இருந்த நிலையில், இப்போது ஜெய்ஷ்வால் இணைந்துள்ளார்.

தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள்

வினோத் காம்ப்ளி: 224 vs இங்கிலாந்து, மும்பை WS | 227 vs ஜிம்பாப்வே, டெல்லி (1992/93)
விராட் கோலி: 213 vs SL, நாக்பூர் | 243 vs SL, டெல்லி (2017/18)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 209 vs இங்கிலாந்து, விசாகப்பட்டனம் | 214 vs இங்கிலாந்து, ராஜ்கோட் (2023/24)

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஷ்வால் இணைந்திருக்கிறார்.  இதற்கு தோனி 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மூன்று சிக்சர்கள் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் அடித்திருக்கிறார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஜெய்ஷ்வால். 

மேலும் படிக்க | Ravichandran Ashwin: அஸ்வினுக்கு பதிலாக படிக்கல் பேட்டிங் செய்ய முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News