இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி பல சாதனைகள் புரிந்து இருந்தாலும், தற்போது ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். கடைசியாக 2019ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார், ஐபிஎல் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். தற்போது தன்னை முழு நேர பிளேயராக மட்டும் நிலைநிறுத்தி உள்ளார் விராட் கோலி.
மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்
இந்நிலையில் விராட் கோலி சதம் அடிக்காததற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணம் என்று இணையத்தில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 70 சதங்கள் அடித்துள்ளார், ரிக்கி பாண்டிங் 71 சதங்கள் அடித்து இருக்கிறார். அதே போல் கேப்டனாக இருந்து மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை கோலி 27 முறையும், பாண்டிங் 28 முறையும் வென்றுள்ளனர். பாண்டிங்கின் மேஜிக் தான் இதனை தாண்டி கோலியால் ரன்கள் அடிக்கமுடியவில்லை, இதற்கு காரணம் பாண்டிங் தான் என்று ரசிகர்கள் விளையாட்டாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அதே போல, கேப்டனாக இருந்து தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வரிசையிலும் பாண்டிங் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து 20 போட்டிகளில் கேப்டனாக இருந்து வென்று கொடுத்துள்ளார். ரோஹித் சர்மா இந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததால் பாண்டிங் சாதனையை முறியடிக்க முடியவில்லை. மேலும், ஒருநாள் போட்டிகளில் பாண்டிங் 30 சதமும், விராட் கோலி 29 சதமும் அடித்துள்ளனர். ஐசிசி கோப்பையை ரிக்கி பாண்டிங் 4 முறையும், தோனி 3 முறையும் வென்றுள்ளனர். இவ்வாறு இந்திய வீரர்கள் பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க முடியாமல் ஏதோ சக்தி தடுக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
What are you doing. #imrohit #ViratKohli #wasimjaffer #rickyponting pic.twitter.com/Vbnf6zSOsd
— Soumya (@Soumya87308250) July 6, 2022
மேலும் படிக்க | இந்திய வீரர்களை திடீர் விசிட் அடித்த தோனி! வைரலாகும் புகைப்படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR