Virat vs Gambhir Fight: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோலி - கம்பீர்! பரபரப்பான சண்டை காட்சி!

Virat kohli Fighting With Gautam Gambhir: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கம்பீர் - விராட் இடையே கருத்து மோதல் நடைபெற்றது.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 06:49 AM IST
  • 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி.
  • லக்னோ அணியை வெற்றி பெற்றது.
  • போட்டி மிகவும் பரபரப்பாக முடிந்தது.
Virat vs Gambhir Fight: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோலி - கம்பீர்! பரபரப்பான சண்டை காட்சி! title=

Virat kohli Fighting With Gautam Gambhir: இரண்டு டெல்லி வீரர்களான விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சண்டை உள்ளது. இந்த சண்டை இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) தொடர்கிறது.  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே ஐபிஎல் 2023 போட்டி 43 க்குப் பிறகு இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  ஆர்சிபி தனது முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்தது, அதன் பின்னர் சிறப்பான பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தபோது, ​​​​விராட் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்எஸ்ஜி வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே ஒரு வாக்குவதத்துடன் போட்டி முடிந்தது. முன்னாள் இந்திய தொடக்க வீரரும், LSG வழிகாட்டியுமான கம்பீர், தானே இதில் ஈடுபட முடிவு செய்தார்.

மேலும் படிக்க | IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்

போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது இது நடந்தது, விராட் மற்றும் நவீன்-உல்-ஹக் இடையே கடும் வார்த்தை போர் நிலவியது.  நவீன்-உல்-ஹக்  மற்றும் விராட் இடையே நடந்த காரசார விவாதங்களை மேலே உள்ள வீடியோவில் பார்க்க முடியும்.  அந்த நேரத்தில், கிளென் மேக்ஸ்வெல் நவீனை வேகமாக இழுத்து சென்றார். கோலி எல்.எஸ்.ஜி கேப்டன் கே.எல் ராகுலுடன் சில வார்த்தைகள் பேசத் தொடங்கினார், அவர் கோலி சொல்வதைக் கேட்டு என்ன நடந்தது என்று விவாதித்தார். மேலும், கம்பீர் இந்த சண்டையில் இணைந்ததால் இன்னும் கூடுதலாக வெடித்தது.  பல வருடங்களுக்கு முன்பு கம்பீர் KKR அணியை பிரதிநிதித்துவப்படுத்தியபோது, ​​கோலி ஆட்டமிழந்த பிறகு இதேபோன்ற சண்டை நடந்தது, அங்கு ரஜத் பாட்டியா சண்டையை நிறுத்த இருவருக்கும் இடையில் வந்தார். இந்த முறை, அமித் மிஸ்ரா இதனை செய்தார்.  

முந்தைய ஆட்டத்தில், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபிக்கு எதிரான எல்எஸ்ஜி வெற்றிக்குப் பிறகு கம்பீர் வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி கூறினார்.  இந்நிலையில், இந்த போட்டியில் சில பரபரப்பான கேட்சுகளை எடுத்த கோலி லக்னோ ரசிகர்களை பார்த்து அதே போல வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி கூறினார்.  லுக்னோ ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது.  ஆர்சிபி 126 ரன்கள் மட்டுமே அடித்த போதிலும், LSG பேட்டர்களிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிப்படவில்லை.  ஆர்சிபி அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை எடுத்தது.  இந்த போட்டியில் கோலி மூன்று கேட்சுகளில் இரண்டை எடுத்தார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி 31 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 40 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.  

மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News