ஐபிஎல் பிரம்மாண்ட தொடக்க விழா
ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் தொடங்கியது. தென்னிந்திய பிரபல நடிகைகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் தமிழ் பாடலுக்கு நடனமாடினர். விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற டும் டும் டும் பாடலுக்கு தமன்னா ஆடிய ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரதத்தில் வந்த கேப்டன்கள்
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதும் கேப்டன்களான தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ரதத்தில் அழைத்து வரப்பட்டனர். இரு அணி கேப்டன்களின் அறிமுகத்துக்குப் பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். தோனி தலைமையிலான சிஎஸ்கே பேட்டிங் விளையாடியது.
தோனி கருத்து
Welcome back, Dhoni. pic.twitter.com/CcxdAa6hKo
— Johns. (@CricCrazyJohns) March 31, 2023
டாஸ் போடும்போது தோனியிடம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இம்பாக்ட் பிளேயர் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இது சூப்பரான விதிமுறை என்றாலும் ஆல்ரவுண்டர்களுக்கான தேவையை குறைத்துவிடும். எக்ஸ்ட்ரா பிளேயர் இருப்பதால் அணிக்கு தேவைப்படும் சமயத்தில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலரை ஒரு அணி எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இது நல்ல விதிமுறை தான் என்று கூறினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023: தமிழ் பாடலுக்கு நடனமாடிய தமன்னா - ராஷ்மிகா: பிரம்மாண்டமாக தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ