IPL 2023 RR vs PBKS: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தவாண் 86 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 34 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து, விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், அஸ்வின், பட்லர் ஆகியோர் சரியான தொடக்கத்தை அளிக்காவிட்டாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 42 ரன்களை குவித்து சற்று ஆறுதல் அளித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ரியான் பராக் 20(12) ரன்களையும், தேவ்தத் படிக்கல் 21(26) ரன்களையும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, இறுதிக்கட்டத்தில் ஷிம்ரான் ஹெட்மயர் சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டத்தை ராஜஸ்தான் பக்கம் இழுத்தார். தொடர்ந்து, இம்பாக்ட் பிளேயராக ராஜஸ்தான் அணிக்கு களமிறங்கிய துருவ் ஜூரல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை சிதறடித்து பக்கபலமாக நின்றார். இதனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 16 தேவைப்பட்டது.
மேலும் படிக்க | சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்த பிறகு லக்னோ அணியில் பெரிய மாற்றம்! திரும்பிய அதிரடி வீரர்
கடைசி ஓவர் சோகம்
ஹெட்மயர் மூன்றாவது பந்தில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, கடைசியில் அந்த அணியால், 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. துருவ் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நாதன் எல்லீஸ் பஞ்சாப் சார்பில் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 2014, 2017 ஆகிய சீசன்களுக்கு பின், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக முதலிரண்டு போட்டிகளை பஞ்சாப் அணி வென்றுள்ளது.
பஞ்சாப் அணியின் வெற்றியின் மூலம், பஞ்சாப் அணி இரண்டு வெற்றிகளின் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடரின் நாளைய லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது. இப்போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
மேலும் படிக்க | யார் இந்த சாய் சுதர்ஷன்? விரைவில் இந்திய அணியில்... பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்டியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ