சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மார்ச் 31, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) முதல் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் 2023 போட்டியின் போது நான்கு முறை சாம்பியன் அணியான சென்னை அணி மோசமாக விளையாடி பிளே ஆப்பிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த சீசனில் வலுவான மறுபிரவேசம் செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் 2023 ஏலத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட வீரர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே ஆர்வமாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு தங்களது சிறந்த தொடக்கக் கூட்டணியைக் கண்டறிந்தது, மேலும் அவர்கள் ஐபிஎல் 2023ன் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஜோடியுடன் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார், அதைத் தொடர்ந்து அனுபவம் வாய்ந்த அம்பதி ராயுடு களமிறங்குவார். பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர் போன்ற பல ஆல்-ரவுண்டர்கள் இருப்பது IPL 2023ல் CSK க்கு மிகப்பெரிய நன்மை. ஸ்டோக்ஸ், ஜடேஜா மற்றும் சாஹர் ஆகிய மூவரும் விளையாடும் 11-ல் நிச்சயம் இருப்பார்கள். சிவம் துபே, பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஐபிஎல் 2023ன் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்காது.
மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இடம் இல்லை! சம்பள பட்டியலில் இருந்து தூக்கிய பிசிசிஐ!
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் கொண்ட இந்த வரிசையில் கேப்டன் எம்எஸ் தோனியின் பேட்டிங் நிலையைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தனது முதல் ஐபிஎல் 2022 சீசனில் சிறப்பாக செயல்பட்ட முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக இந்த ஆண்டு விளையாடுவது சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் அடியை சந்தித்தது. தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே அல்லது ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோருடன் இணைந்து வேகப்பந்து வீச்சு தாக்குதலை வழிநடத்துவார். இலங்கையின் ஆஃப் ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு ஐபிஎல்லில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், இதனால் அவர் சிஎஸ்கேயின் நான்காவது வெளிநாட்டு வீரராக இருக்கலாம்.
சிஎஸ்கே-வின் உத்ததேச பிளேயிங் 11:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே/ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங்
சிஎஸ்கே அணி விவரம்:
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா, சிசண்டா மகலா
மேலும் படிக்க | சிஎஸ்கே-வுடன் மோதல்: ஜடேஜா போட்ட கண்டிஷன் - சமாதானப்படுத்திய தோனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ