IPL 2023: ’சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க’ ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம்

ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்வது என்பது வாய்பில்லாத ஒன்று என்ற வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2023, 07:34 AM IST
IPL 2023: ’சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க’ ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம் title=

ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் அந்த அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. லக்னோ அணியிடம் சேஸிங் மட்டும் செய்யலாம் என நினைக்காதீங்க என்ற மெசேஜை அவர்கள் கொடுத்துக் கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அந்தளவுக்கு லக்னோ அணியின் பவுலிங் மிகவும் பலமாக இருக்கிறது. 

லக்னோ அணி ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் அதாவது ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணிக்கு இந்த தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டியும் கூட. அதனால் அந்த அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்தளவுக்கு அவர்கள் விளையாடவில்லை. முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ அணி தட்டுத் தடுமாறி 154 ரன்களை எடுத்தனர். பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறினர். 

மேலும் படிக்க | Mohammed Siraj: சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட நபர்... உடனடியாக அவர் செய்தது இதுதான்!

குறிப்பாக கேஎல் ராகுல் பவர் பிளேவில் ஒரு ஓவரை மெய்டனாக்கியது கிரிக்கெட் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இருப்பினும் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கைல் மெயர்ஸ் அரைசதம் அடித்தார். இதன் மூலம் கவுரவமான ஸ்கோரை அந்த அணியால் எடுக்க முடிந்தது. ஆனால், சொந்த பிட்ச் என்பதால் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2வது இன்னிங்ஸை விளையாடிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடவில்லை.

பட்லர் 41 பந்துகளுக்கு 40 ரன்களும், ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, மிடில் ஆர்டரில் வந்தவர்கள் சோபிக்க தவறினார்கள். குறிப்பாக, இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாத ராஜஸ்தான் அணியின் ரியான் பராக், இந்த போட்டியில் மிக மோசமாக ஆடினார். அவருக்கு பதிலாக வேறு நல்ல பிளேயருக்காவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என லைவ் மேட்ச் போய் கொண்டிருக்கும்போதே இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கினர். அந்தளவுக்கு அவருடைய ஆட்டம் இருந்தது. முடிவில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் முதலில் லக்னோ அணி பேட்டிங் விளையாடினால், அந்த அணியிடம் சேஸிங் செய்வது கடினம் என்பதை மீண்டுமொரு முறை ஐபிஎல் களத்தில் அந்த அணி நிகழ்த்தி காட்டியிருக்கிறது. 

மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News