ஐபிஎல் 2023 அகமதாபாத் மைதானத்தில் வெகுவிமரிசையாக தொடங்க இருக்கிறது. அறிமுக போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனானா ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு அணிகளும் சரிசம பலத்தை கொண்டிருந்தாலும், தோனியின் அனுபவம் மற்றும் மாஸ்டர் பிளான் சிஎஸ்கே அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். களம் இறங்குவதற்கு முன்பும், விளையாடிக் கொண்டிருக்கும்போதும் திடீரென தன்னுடைய அஸ்திரங்களை சூழ்நிலைக்கு ஏற்ப வீசிக் கொண்டே இருப்பவர் தோனி. அதில் அவர் கைதேர்ந்தவராக இருப்பதால் தான் உலகளவில் கிரிக்கெட்டில் தலைச்சிறந்த கேப்டனாக இன்றும் இருக்கிறார்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி பற்றியா சுவாரஸ்ய தகவல்கள்!
ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிக முறை பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது என்றால் அது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தான். கடந்த ஆண்டு அந்த அணிக்கு சரியான ஆண்டாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இம்முறை அப்படி இருக்காது என நம்பிக்கையுடன் இருக்கலாம். ஏனென்றால் எப்போதெல்லாம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி படுதோல்வி அடைகிறதோ அப்போதெல்லாம் அடுத்த தொடரில் வெளுத்து வாங்கி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மும்பை அணி 5 முறையும் சிஎஸ்கே 4 முறையும் ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கின்றன.
இந்த முறை தோனி ஐபிஎல் தொடருக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், சிஎஸ்கேவின் ஒவ்வொரு ஆட்டத்தையும், குறிப்பாக தோனியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கு நீண்ட காலமெல்லாம் இல்லை. இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதியான நாளை மாலை அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
இப்போட்டியை வெற்றியுடன் தொடங்க தோனி ஏற்கனவே தன்னுடைய அஸ்திரங்கள் அனைத்தையும் தயார் செய்துவிட்டார். சிஎஸ்கே அணியின் வெற்றியில் பெரும்பாலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர்களே முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களை சரியாக பயன்படுத்துவதில் தோனி எப்போதும் கில்லி. இந்த முறை உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சிஎஸ்கே அணியில் இருப்பதால் வழக்கம்போல் சரவெடியை சிஎஸ்கே அணியிடம் இருந்து எதிர்பார்க்கலாம். சென்னை சேப்பாக்கத்தில் தோனி தலைமையில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே அணி வீரர்கள் அகமதாபாத் சென்றுவிட்டனர். அங்கு போட்டிக்கு தயாராகவும் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா அணிக்கு எதிராக தோனி எப்படி தன்னுடைய அஸ்திரங்களை வீசப்போகிறார் என்பதை பார்க்க இன்னும் காலம் 30 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
மேலும் படிக்க | GT vs CSK: முதல் போட்டியில் வெற்றி பெற சென்னை அணி செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ