IPL 2023: வம்பிழுக்கிறதையே வேலையா வச்சிருக்கும் நவீன் உல் ஹக் - விராட் உடன் மோதலுக்கு பிறகு சொன்ன வார்த்தை

விராட் கோலியுடன் மோதலுக்குப் பிறகு சக அணி வீரரிடம் பேசியிருக்கும் நவீன் உல் ஹக், நான் ஐபிஎல் விளையாட தான் வந்திருக்கிறேன்... வசைகளை வாங்கி கொள்ள அல்ல என தெரிவித்திருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 4, 2023, 11:03 AM IST
  • போகும் இடத்தில் வம்பிழுக்கும் நவீன் உல் ஹக்
  • பிக்பாஷ், பிஎஸ்எல் தொடர்களிலும் மோதல்
  • இப்போது விராட் கோலியை சீண்டியிருக்கிறார்
IPL 2023: வம்பிழுக்கிறதையே வேலையா வச்சிருக்கும் நவீன் உல் ஹக் - விராட் உடன் மோதலுக்கு பிறகு சொன்ன வார்த்தை title=

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விராட் கோலியும் அவருடன் காரசாரமாக பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போனது. போட்டிக் பிறகு கைலுக்கும்போது, நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆக்ரோஷத்துடன் பேசிக் கொண்டனர். இது கிரிக்கெட் உலகில் சலசலப்பை உண்டாக்கியது. மேலும், விராட் கோலியும், கம்பீரும் மைதானத்தில் இதன் தொடர்ச்சியாக சண்டைபோட்டுக் கொண்டது பெரிய சலசலப்பை உண்டாக்கியது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஐபிஎல் நிர்வாகம் விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 100 விழுக்காடு அபராதம் விதித்தது. இதேபோல் நவீன் உல் ஹக்கிற்கு 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது. இதகுறித்த சலசலப்பு இன்னும் அடங்கவில்லை. நவீன் உல் ஹக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உனக்கு தகுந்த பரிசு கடந்த போட்டியில் கிடைத்தது. அதற்கு நீங்கள் முழு தகுதியானவர் தான் என விராட் கோலியை மறைமுகமாக சாடும் வகையில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். மேலும், தனது சக அணி வீரரிடம் இங்கு நான் ஐபிஎல் விளையாட தான் வந்திருக்கிறேன், வசவுகளை வாங்கிக் கொள்ள அல்ல என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு தகுதி பெற சென்னை அணிக்கு வாய்ப்பு இல்லையா?

இதற்கு பதிலடி கொடுத்த கோலி, நீங்கள் கொடுக்க தயாராக இருக்கும்போது, வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார். விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தபோது ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். அப்போது இரு அணிகளும் மோதிக் கொண்ட போட்டியில் இருவருக்கும் இடையே மூண்ட வார்த்தைப்போர் கைகலப்பு வரை சென்றது. அப்போது முதல் இந்த சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் இப்போது நவீன் உல்ஹக்கும் விராட் கோலியுடனான மோதல் போக்கை கையில் எடுத்திருக்கிறார். 

இவரது ஹிஸ்டிரியை எடுத்து பார்த்தால் விளையாடும் இடங்களில் எல்லாம் வம்பிழுப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் ஷாகித் அப்ரிடியுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நவீன் உல் ஹக், ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் லீக் உள்ளிட்ட விளையாடும் அனைத்து 20 ஓவர் லீக் தொடர்களிலும் யாராவது ஒருவருடன் பஞ்சாயத்து செய்திருக்கிறார். இதனை சுட்டிக் காட்டியிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலி நவீன் உல் ஹக்கை சரியான வகையில் தான் டீல் செய்திருப்பதாக கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | பஞ்சாபை எதிர்த்து மும்பை அபார வெற்றி! கோப்பைக் கனவை நெருங்கும் மும்பை இண்டியன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News