ஐபிஎல் 2023: அர்ஷ்தீப் சிங்கின் அசுர வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை உடைந்த ஸ்டம்புகள் - வீடியோ

ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், இரண்டு முறை ஸ்டம்புகளை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2023, 10:18 AM IST
ஐபிஎல் 2023: அர்ஷ்தீப் சிங்கின் அசுர வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை உடைந்த ஸ்டம்புகள் - வீடியோ title=

ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் போட்டி தொடரில் 31-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் திரில்லான வெற்றியை பெற்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணியை கதிகலங்க வைத்தார். இரண்டு முறையும் மிடில் ஸ்டம்புகள் உடைந்தது. அவரின் அசத்தலான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றதுடன், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறினார். 

மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவரில் 4 விக்கெட்... கேஎல் ராகுலால் சொதப்பியது லக்னோ - குஜராத் மாஸ் வெற்றி!

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. பின்னர் சேஸிங் இறங்கிய மும்பை அணிக்கு கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் மும்பையின் வெற்றிக்கு தேவைப்பட்டது. மும்பையின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ள டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்ததால் வெற்றிக்கான வாய்ப்பில் மும்பை நீடித்தது. ஆனால், அர்ஷ்தீப்பிடம் இருந்து பந்துகள் ஒவ்வொன்றும் தீப்பொறிகள் பறக்க சென்றதால், அந்த பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. 3வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழக்க, 4வது பந்தில் நேஹால் கிளீன் போல்டானார். இரண்டு போல்டுகளும் ஏதோ சாதாரணமானது அல்ல.

அர்ஷ்தீப்பின் வேகத்தில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளிலும் மிடில் ஸ்டம்புகள் உடைந்தது. இது மும்பை அணி ரசிகர்களின் இதயத்தையும் சேர்த்தே உடைந்தது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அர்ஷ்தீப் வீசிய அற்புதமான ஓவர் மூலம் மும்பையின் வெற்றிக் கனவு தகர்ந்து, பஞ்சாப் அணி வெற்றி வாகை சூடியது. 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருது அவரை தேடிச் சென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவருமே அர்ஷ்தீப்பின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருந்ததாக பாராட்டினர்.  

மேலும் படிக்க | IPL 2023: ஆட்டத்தை மாற்றிய அர்ஷ்தீப் சிங்... மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News