மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!

மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2022, 05:19 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மற்ற ஐபிஎல் அணிகள்
  • மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு
  • புதிய மைதானங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ
மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..! title=

ஐபில் 2022 -க்கான ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக மும்பை, புனே உள்ளிட்ட 3 மைதானங்களில் மட்டும் ஐபில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ள பிசிசிஐ, மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 போட்டிகளும், எஞ்சிய போட்டிகள் புனே மற்றும் அகமதாபாத்தில் நடத்துகிறது.

மேலும் படிக்க | பஞ்சாப் அணியின் கேப்டன் இவர்தான் - அறிவிப்பு விரைவில்

 

குறிப்பாக, பிளே ஆஃப் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத் மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மும்பை அணிக்கு ஆதரவாக இந்த முடிவு இருப்பதாக தெரிவித்துள்ள ஐபிஎல் அணிகள், மற்ற அணிகள் வேறு மைதானங்களில் விளையாடும்போது, மும்பை மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவதில் நியாயமில்லை என கூறியுள்ளன. ஒருதலைபட்சமாக இந்த முடிவு இருப்பதால், மைதான தேர்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு ஐபிஎல் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனால், புதிய மைதானங்களை தேர்வு செய்ய வேண்டிய சூழலுக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் மட்டுமே விளையாடுவேன் என தெரிவித்துள்ளதால், பிசிசிஐயின் இந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸின் விருப்பத்துக்கு மாறாக அமையும். இந்த விவகாரத்தில் பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியா vs இலங்கை; முதல் T20-ல் இன்று மோதல் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News