ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அணி பெரும் தொகை எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல்-ல் வெற்றி மற்றும் இரண்டாம் இடம் பெறும் அணிகளுக்கு மிகப்பெரிய ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2022, 08:22 PM IST
  • ஐபிஎல் 2022ன் கோப்பையை குஜராத் அணி வென்றுள்ளது.
  • அதிக ரன்களை பட்லர் அடித்துள்ளார்.
  • அதிக விக்கெட்களை சாஹல் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அணி பெரும் தொகை எவ்வளவு தெரியுமா?  title=

ஏறக்குறைய இரண்டு மாத லீக் ஆட்டங்களுக்கு பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022ன் பைனல் போட்டி நடந்து முடிந்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பைனல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.  டேபிள்-டாப்பராக இருந்து தற்போது தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.   

 

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் உலகின் பணக்கார டி20 லீக் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட பல அழகான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி மற்றும் இரண்டாம் இடம் பெறும் அணிகளுக்கு மிகப்பெரிய ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்குப் பிறகு வழங்கப்பட்ட ரொக்க விருதுகளின் முழுப் பட்டியல்:

வெற்றியாளர்: குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் ஆனதற்காக பிசிசிஐ மூலம் ₹20 கோடி ரொக்கப் பரிசாகப் பெறும்.

ரன்னர்-அப்: இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்காக ராஜஸ்தான் அணி பிசிசிஐ-யிடமிருந்து ₹13 கோடிகளைப் பெறுவார்.

மூன்றாவது இடம்: குவாலிஃபையர் 2 போட்டியில் தோல்வியடைந்த ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ மூலம் ₹7 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

நான்காவது இடம்: எலிமினேட்டரை (எல்எஸ்ஜி) இழந்த அணிக்கு பிசிசிஐ ₹6.5 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

ஆரஞ்சு கேப்: அதிக ரன்கள் எடுத்த ஜோஸ் பட்லருக்கு ஐபிஎல் ஆரஞ்சு தொப்பி மற்றும் ₹15 லட்சம் ரொக்கப் பரிசு.

ஊதா நிற கேப்: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஊதா நிற தொப்பி மற்றும் ₹15 லட்சம் ரொக்கப் பரிசு பெறுவார்.

ஐபிஎல் 2022 சீசனின் வளர்ந்து வரும் வீரர் - உம்ரான் மாலிக் வீரருக்கு ₹20 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றார்.

ஐபிஎல் 2022-ல் அதிகபட்ச சிக்ஸர் விருது: ஜோஸ் பட்லருக்கு ₹12 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றார்.

சீசனின் கேம்-சேஞ்சர்: ட்ரீம் 11 கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் – ஜோஸ் பட்லர் ₹12 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றார்.

சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர்: ஐபிஎல் 2022 சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் தினேஷ் கார்த்திக் (SR – 183.33) ₹15 லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கும்.

சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: ஜோஸ் பட்லர் ₹12 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றார்.

ஃபேர் ப்ளே விருது: சீசன் முழுவதும் நியாயமான விளையாட்டில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் & ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரொக்கப் பரிசு கிடைக்கும்.

butler

மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜோஸ் பட்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News