ஐபிஎல் 2022 போட்டியின் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாய்க்கு வந்து விட்டன. பிளே ஆப்பிற்கு இதுவரை புதிய அணிகளாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும், சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெளியேறி உள்ளன. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவி ஐபிஎல் 2022-ல் இருந்து வெளியேறி உள்ளது. ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் 3,4வது இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றன.
மேலும் படிக்க | லக்னோ - கொல்கத்தா போட்டியின் சுவாரஸ்யங்கள்
இந்த வருட ஐபிஎல் போட்டியில் பாப் டு பிளசி தலைமையில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றது. இருப்பினும் இடையில் ஏற்பட்ட சறுக்களால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் 14 புள்ளிகள் பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி ஒரு இடம் மேலே உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் பிளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும்.
மறுபுறம் டெல்லி அணியும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றி பெற்றதன் மூலம் தற்போது 4வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் மட்டுமே டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும். இதனால் அடுத்து நடக்க இருக்கும் 4 லீக் ஆட்டங்களும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் விலகிய வில்லியம்சன் - சன்ரைசர்ஸூக்கு பின்னடைவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR