புதுடெல்லி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷியான செய்தி, உண்மையில், UAE இல் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Covid 19) காரணமாக, BCCI போட்டியை காலவரையின்றி ஒத்திவைத்தது.
போட்டி 25 நாட்கள் இருக்கலாம்
ஐபிஎல் 2021 (IPL 2021) தொடரை செப்டம்பர் 17ம் தேதி தொடங்க பிசிசிஐ (Board of Control for Cricket in India) திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 18 அல்லது செப்டம்பர் 19ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17 அதாவது வெள்ளிக்கிழமை தொடரை தொடங்குவது என்று BCCI முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 10ம் தேதி பைனல் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் 25 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
ALSO READ | Live-ஆக இருப்பது தெரியாமல் பேசிய Kohli, Shastri: லீக் ஆகி வைரல் ஆகிறது சுவாரசியமான ஆடியோ
பார்வையாளர்கள் வர ஒப்புதல் கிடைக்கலாம்
கல்ஃப் செய்தியின்படி, பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர ஒப்புதல் பெறலாம். இந்த விவகாரம் பி.சி.சி.ஐ மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. IPL 2021 இன் மீதமுள்ள 31 போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று UAE நகரங்களில் நடைபெறும். தகவல் படி, துபாய் விளையாட்டு கவுன்சில் மைதானத்திற்கு 30% பார்வையாளர்கள் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 70 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், ஐ.பி.எல் போது, பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர ஒப்புதல் பெற வாய்ப்புகள் இருக்கலாம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளார். பி.சி.சி.ஐ குழு அடுத்த மூன்று நான்கு நாட்களில் ஐக்கிய அரபு எமிரேட் நகரங்களான துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களுக்கு வருகை தரும். போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ALSO READ | ICC: 2024-2031 வரையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR